/indian-express-tamil/media/media_files/2025/10/16/pradeep-john-2025-10-16-09-50-21.jpg)
தென் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி, பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் (10 செ.மீ) அதிகமான மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மழை பெய்த அளவு குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 146.00 மி.மீ மழை பதிவானது. காயல்பட்டினம் (திருச்செந்தூர் தாலுகா) 154.00 மி.மீ மழை பதிவாகி, அதிக மழையைப் பெற்ற பகுதியாக உள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டம் (56.20 மி.மீ), சாத்தான்குளம் (84.00 மி.மீ), ஓட்டப்பிடாரம் (54.00 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது. தொடரும் மழையும் அடுத்து வரும் நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு குறித்தும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரப்படி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும், அதன் பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த இரு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று நண்பகல் முதல் மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
First big rains in Thoothukudi and Tirunelveli belts with lots of centuries. The rains to continue for 3 more hours and taper off near the coastal areas of Thoothukudi and Nellai districts.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2025
Other interior parts of Thoothukudi and Nellai might get rains till noon/evening.… pic.twitter.com/4AUj5pM8zO
இதற்கிடையே, தலைநகர் சென்னையில் இன்று காலை பொழுதில் பிரகாசமான சூரிய ஒளியுடன் கூடிய வானிலை காணப்படுகிறது. இருப்பினும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார். முக்கியமாக, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அலுவலகம் முடிந்து இரவில் வீடு திரும்புவோர் குடை அல்லது ரெயின்கோட்டை எடுத்துச் செல்வது நல்லது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.