scorecardresearch

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் இன்று(நவ.1) அறிவித்துள்ளது

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

மன்னார் வளைகுடா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் இன்று(நவ.1) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து, மன்னார் வளைகுடா அருகில் நிலைகொண்டு இருப்பதால் நவம்பர் 5-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

நவம்பர் 1 (நாள் 1): தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஆந்திராவின் தென் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.

நவம்பர் 2 (நாள் 2): தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆங்காங்கே கனமழை பெய்யும். ஆந்திராவின் தென் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.

நவம்பர் 3 (நாள் 3): தமிழகம் மற்றும் புதுச்சேரி கனமழை பெய்யும். கேரளா மற்றும் ஆந்திராவின் தென் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யும்.

நவம்பர் 4 (நாள் 4): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யும். உள்தமிழகத்தில் கனமழை பெய்யும்.

நவம்பர் 5 (நாள் 5): தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Heavy to very heavy rain to be flow in tamilnadu and puducherry for next 5 days indian meteorological center