நடிகர் சங்க கட்டடம் கட்ட தற்காலிக தடை!

கடந்த சில நாள்களுக்கு முன்தான் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்

கடந்த சில நாள்களுக்கு முன்தான் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 26 கோடியில் பலதரப்பட்ட வசதிகளுடன் நடிகர் சங்க கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பும் வெளியானது, விருப்பமுள்ளவர்கள் மே 8-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அறிவித்திருந்தனர். இதற்காக நடிகர் சங்கத்தில் ஒரு பெட்டியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக பொது சாலையிலிருந்து 40அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கே.எம்.ஶ்ரீரங்கன் மற்றும் ஆர்.அண்ணாமலை ஆகியோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபகாரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, நடிகர் சங்கக் கட்டடத்தை எழுப்ப தற்காலிகத் தடை விதித்துள்ளது.

×Close
×Close