அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை: நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை அனுமதி இன்றி போராட்டம், கூட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எந்தெந்த இடங்களில் போராட்டங்கள் நடத்தலாம் என காவல்துறை வரையறை செய்துள்ளது. இதற்கான பட்டியலும் இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென பொது இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுவதால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், முன் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

×Close
×Close