Advertisment

தமிழகத்தில் மேல் நிலைப்பள்ளிகளில் வைஃபை வசதி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

author-image
Ganesh Raj
Jun 19, 2017 11:09 IST
KA Sengottaiyan

தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வைஃபை வசதி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்கு முன்பாக கேள்வி நேரத்தின் போது நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுமா எனஎ சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்

அப்போது அந்த கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வைஃபை வசதி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று வைஃபை வசதியை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக தங்களது பள்ளிகளிலேயே பல்வேறு விதமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பள்ளிக்கல்வி துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#Minister Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment