scorecardresearch

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்: அர்ஜுன் சம்பத்

அரசிலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் செய்து கொண்டிருக்கிறார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: இந்து மக்கள் கட்சியின் சார்பில் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்து பேசினோம். தமிழகத்தினுடைய சிஸ்டம் மிகவும் கெட்டுப்போய் இருக்கிறது. இது சரிசெய்யப்பட வேண்டும். இதை சரிசெய்யக் கூடிய ஆற்றல், வல்லமை ரஜிகாந்த்துக்கு மட்டுமே […]

Rajinikanth
அரசிலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் செய்து கொண்டிருக்கிறார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: இந்து மக்கள் கட்சியின் சார்பில் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்து பேசினோம். தமிழகத்தினுடைய சிஸ்டம் மிகவும் கெட்டுப்போய் இருக்கிறது.

இது சரிசெய்யப்பட வேண்டும். இதை சரிசெய்யக் கூடிய ஆற்றல், வல்லமை ரஜிகாந்த்துக்கு மட்டுமே இருக்கிறது. ஆகவே ரஜினிகாந்திடம் தாங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன்.

அரசியலுக்கு வருவது குறித்து யோசனை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவார். ரஜினிகாந்தை பாஜக இயக்குவதாக சொல்லப்படுவது தவறானது. நாட்டுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே ரஜினிகாந்த்தின் விருப்பம் என்று கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hindu makkal katchis arjun sampath said that rajinikanth was thinking about to enter into politics