களளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் தனது பெயரை பயன்படுத்தி திசை திருப்ப முயற்சித்ததாக
திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலையின் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ், அதன் நகலை பாஜக தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “60 பேரின் உயிரிழப்புக்கு காரணமான திமுகவின் தவறான ஆட்சியில் இருந்து திசை திருப்பும் வகையில் அவதூறு, பொய்ப் பிரச்சாரம் செய்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இன்று அனுப்பப்பட்ட அவதூறு நோட்டீஸின் நகல் இதோ உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மரண சிகிச்சை மையம் கட்டவும், செயல்படவும் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அண்ணாமலைக்கு எதிராக "பொய், இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான" சில நேரடி குற்றச்சாட்டுகளை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறினார்” என்றும் அவதூறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Hooch tragedy: Annamalai sends defamation notice to DMK leader, seeks Rs 1 crore in damages
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“