தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் திட்டமிட்டபடி அக்டோபர் 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள 8 லட்சம் தொழிற்துறையினர், நிறுவனங்களை மூடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,மின் கட்டண உயர்வைக் குறைக்காவிட்டால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் திட்டமிட்டபடி வருகின்ற 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில், சிறுகுறு நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெறுவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன், கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாததாகவும், 5 அம்ச கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“