Advertisment

‘என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தி பேரன்களா?’ டி.டி.வி.தினகரன் காரசாரம்

‘நான் காந்தி பேரன் இல்லை, என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தி பேரன்களா?’ என பாஜக குறித்து காரசாரமாக இன்று கேள்வி எழுப்பினார் டி.டி.வி.தினகரன்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
vk Sasikla, TTV Dhinakaran, Income tax department, IT raids,Jayalalitha, jeya tv

‘நான் காந்தி பேரன் இல்லை, என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தி பேரன்களா?’ என பாஜக குறித்து காரசாரமாக இன்று கேள்வி எழுப்பினார் டி.டி.வி.தினகரன்.

Advertisment

வி.கே.சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 11) 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அடையாறு பெசன்ட் நகர் இல்லத்தில் டி.டி.வி.தினகரன் இன்று பகல 11.30 மணிக்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களது குடும்பத்தினர், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் இல்லங்களில் வருமான வரித்துறை நடத்தும் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. நான் மதிக்கிற சில பத்திரிகைகளும்கூட பாண்டிச்சேரியில் எனது பண்ணை வீட்டில் பாதாள அறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அங்கு கதவுகளுக்கு டிஜிட்டல் லாக் இருந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள்.

அங்கு அப்படி எந்த பாதாள அறையும் இல்லை. சென்னையில் எனது வீட்டிலாவது ‘பேஸ்மெண்ட் ஃப்ளோர்’ இருக்கிறது. அதுகூட பாண்டிச்சேரி பண்ணை வீட்டில் இல்லை. ஏன் இப்படி எழுதினார்கள்? எனத் தெரியவில்லை.

என்றோ என்னைப் பார்த்தவர்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் என்றெல்லாம் பட்டியல் இட்டு 187 இடங்களில் 1800 அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவதில் இருந்தே இந்த நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. தவிர, புகழேந்தி எங்கள் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர். தங்க தமிழ்ச்செல்வன், இதுவரை அமைச்சர் பதவியில்கூட இருந்தது கிடையாது. அவரது உதவியாளர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். இதையெல்லாம் வைத்தே அரசியல் நோக்கத்துடன் ரெய்டு நடத்துவதாக கூறுகிறோம்.

இதை சொன்னால், நாங்கள் அவர்களுக்கு (பாஜக) போட்டியே இல்லை என்கிறார்கள். நாங்கள் பெரிய கட்சி இல்லை. அம்மா மறைவுக்கு பிறகு இந்தக் கட்சியைக் காப்பாற்றப் போராடும் ஒரு குழுதான். அப்புறம் ஏன் எங்களை டார்கெட் செய்கிறீர்கள். 234 தொகுதிகளிலும் கிளை வைத்திருக்கிற நீங்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவை என்ன?

கோவில் பூசாரி கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள், சேகர் ரெட்டியுடன் போட்டோ எடுத்துக் கொண்டவர்கள், சேகர் ரெட்டியின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறவர்கள் வீட்டில் எல்லாம் இதேபோல சோதனை நடக்கவில்லையே ஏன்? அதனால்தான் இந்த சோதனையை உள்நோக்கம் கொண்டது என்கிறோம்.

உடனே என்னை, ‘காந்தியின் பேரனா?’ என்கிறார்கள். நான் காந்தியின் பேரன் இல்லை. ரொம்ப சாதாரணமானவன். ஆனான் என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தியின் பேரன்களா? என நான் கேட்க விரும்புகிறேன். எந்தக் கட்சியையும் அழித்துவிட்டு இன்னொரு கட்சி வளர முடியாது என்பதை மட்டும் கூற விரும்புகிறேன்.

அம்மா மறைவுக்கு பிறகு ஆட்சியில் இருப்பவர்களை விட்டுவிட்டு, கட்சியைக் காப்பாற்ற போராடுகிற சிறு குழுதான் நாங்கள். அதனால்தான் எங்கள் மீது இந்த ரெய்டு. ஐந்தரை கோடி ரூபாய் பண, 10 கிலோ தங்கம் எங்கள் குடும்பத்தினரின் இல்லங்களில் கைப்பற்றியதாக கூறுகிறீர்கள். அது கணக்கில் காட்டப்பட்டதா? என்பதை பார்க்க வேண்டும். தவிர, எனது பண்ணை வீட்டில் பாதாள அறை இருப்பதுபோல வந்த செய்தியா? என்றும் தெரியவில்லை.’ என்றார் டிடிவி தினகரன்.

‘சசிகலா உறவினர்கள் யாரும் வருமானத்திற்கு அதிகமாக ஒரு பைசா சேர்க்கவில்லை என உங்களால் கூற முடியுமா?’ என நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு சற்றே டென்ஷனான தினகரன், ‘என்னிடம் வருமானத்திற்கு அதிகமாக ஒரு பைசா இல்லை என்பதை என்னால் சொல்ல முடியும். கூடுதலாக எனது மனைவி பற்றியும் கூறலாம். என் தந்தை செய்கிற தொழில் பற்றியே நான் கூற முடியாது. உங்கள் அண்ணன் என்ன செய்கிறார்? என உங்களால் சொல்ல முடியுமா? எனவே இந்தக் கேள்வியே தவறு’ என்றார் தினகரன்.

 

Income Tax Department Ttv Dhinakaran Vk Sasikala Jeya Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment