ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வரும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜெயா தொலைக்காட்சியின் அலுவகம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4-வது நாளாக இன்றும் சோதனை தொடர்கின்றது.
ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை அதிகாரிகள் துருவி துருவி சோதனை நடத்தினர். வருமான வரி முறையாக செலுத்தாதன் காரணமாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயா டிவி-யின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் நிர்வகித்து வரும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில், 20க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் போலி நிறுவனங்களை சார்ந்தவை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.