Advertisment

ஜெ., இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
dindigul srinivasan

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதேபோல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் என தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் எனவும், அவர் இட்லி சாப்பிடுகிறார் எனவும், அங்குள்ள செவிலியர்களிடம் சகஜமாக பேசுகிறார் எனவும், கூறி வந்தனர்.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தர்மயுத்ததை தொடங்கிய பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை தேவை என்பது தான். தொடர்ந்து, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறி இரு அணிகளும் கடந்த மாதம் இணைந்தன.

மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருகிறது என்று கூறிய பன்னீர்செல்வம் தரப்பினர் திடீரென அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவித்த விஷயம் சர்ச்சையை கிளப்பியது. அணிகள் இணைப்புக்கு முன்னர் கூட, பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அணிகள் இணைப்புக்கு பின்னர், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும், அது வேற வாய் இது நார வாய் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்யும் வகையில் தாங்கள் தெரிவித்த கருத்துகளில் இருந்து பல்டி அடித்து வேறு மாதிரியாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலா குடும்பம் தான் என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகாலா தான் எங்களுக்கு எல்லாமே என்று கூறி வந்த அவர்கள், தற்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் இது போன்று மாறிமாறி பேசுவது மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பத்தினர் விடவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்கிறோம். விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் ஏன் சந்திக்க விடவில்லை என்ற மர்மம் வெளிவரும் என்றும் அவர் பேசினார்.

Jayalalithaa Ttv Dhinakaran Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment