'அரசியலுக்கு வர மாட்டேன்னு நான் சொல்லலையே' ரஜினிகாந்த்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “அடுத்தக் கட்டமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் ரசிகர்களை சந்திப்பேன். அரசியலுக்கு வருவது குறித்து, நான் முடிவு எடுக்கும் போது உங்களிடம் அறிவிப்பேன்” என்றார்.

மேலும், ‘உங்களை பார்த்துவிட்டு வரும் பிரபலங்கள், நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறார்கள்? ஆனால், நீங்களோ ஒவ்வொரு முறையும் மறுக்குறீர்களே?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “அப்படி நான் மறுக்கலையே… மறுக்கலையே…! எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். முடிவு எடுக்கும் போது உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.

×Close
×Close