முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த இஃப்தா விழாவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 34 பேரும் புறக்கணித்தனர்.
ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானான். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகக டிடிவி தினகரன் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் இருந்து டிடிவி தினகரன் சென்னை திரும்பியதும், கட்சி பணிகளை தொடர்வதாக அறிவித்தார். அதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். ஆனால் இன்று வரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் பழனிச்சாமியை கடந்த வாரம் சந்தித்தனர். அப்போது, ‘டிடிவி.தினகரன் முன்னிலையில் இஃப்தார் நிகழ்ச்சியும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் விழாக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது அதிமுக அம்மா அணியில் பிளவை அதிகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.