இளையான்குடி ஆட்டோ டிரைவர் கொலை: குடும்பத்தினர், உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் நுழைவு வாயில் முன் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் நுழைவு வாயில் முன் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
sankar

இளையான்குடி அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்தழகு என்பவரின் மகன் சங்கர் (29) ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவரிடம் கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த மாதவனின் மகன் அன்புச்செல்வன் (19) ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். மூன்று நாட்கள் முன், இரவு தாயமங்கலத்தில்  சாலை  நடுவே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைப் பற்றி சங்கர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியின் மகன் செல்வகுமார் (28) இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, மறுநாள் இரவு 9:15 மணியளவில் தாயமங்கலத்தைச் சேர்ந்த ரவி மகன் முத்துவேல் (27) மற்றும் செல்வகுமார் ஆகியோர் சங்கரை போன் செய்து அழைத்துள்ளனர். சங்கர், அவரது தம்பி சரவணன் மற்றும் அன்புச்செல்வன் மூவரும் அங்கு சென்றபோது, முத்துவேல், செல்வகுமார் உள்ளிட்ட 6 பேர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாளால் தாக்கியுள்ளனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அன்புச்செல்வன் படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

sankar 1

அன்புச்செல்வன் அளித்த புகாரின் பேரில் போலீசார் முத்துவேல், செல்வகுமார், பிரேம்குமார் (22) ஆகிய மூவரையும் கைது செய்து, சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். இதனிடையே சங்கரின் உறவினர்கள் “சங்கரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனக் கோரி இளையான்குடி கண்மாய்கரை அருகே நேற்று காலை 10 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தாசில்தார் முருகன் மற்றும் போலீசார் இடையூறு இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று பரமக்குடி - காளையார்கோவில் சாலையில் சங்கரின் உறவினர்கள் 2-வது நாளாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் சங்கரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment
Advertisements
Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: