Advertisment

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்; உயர் நீதிமன்றம் சிட்டி சிவில் கோர்ட்டுக்கு உத்தரவு

பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு தடை கோரிய இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு சென்னை உரிமையில் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
ilayaraja, ilayaraja music director, ilayaraja music composer, இளையராஜா, இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ பிரச்னை, சென்னை உயர் நீதிமன்றம், ilayaraja - prasad studio clash, case chennai high court order to city civil court, high court order within 2 weeks finsh the case

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களுக்கு பின்னனி இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து காலி செய்து இளையராஜா வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கெனவே சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், சமரச மையத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுமார் 40 வருடங்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து திரைபட பின்னனி இசை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சில நாட்கள் கூடுதலாக இருக்க அனுமதிப்பதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை உரிமையில் நீநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இரண்டு வாரத்துக்குள் முடித்து உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment