Advertisment

கள்ளச் சாராய வணிகத்தில் தி.மு.க-வினர் தொடர்பு: புதுவை அ.தி.மு.க புள்ளிவிவர புகார்

இந்த மெத்தனால் தமிழகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு அதை விற்பனை செய்ததன் மூலம் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

author-image
abhisudha
New Update
Illicit liquor death

Illicit liquor death

புதுச்சேரி மாநில அதிமுக  செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

Advertisment

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவி பறிபோனதிலிருந்து தான் என்ன பேசுகிறோம், எதைப் பற்றி பேசுகிறோம், நாம் பேசுவது சரியா தவறா? இதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பிதற்றி கொண்டு வருகிறார்.

தற்பொழுது நான்கு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் மெத்தலால் குடித்து 20க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்ததற்காக புதுச்சேரி மாநில முதலமைச்சர்  ரங்கசாமி  பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டு விஷம பிரச்சாரம் செய்துள்ளார்.

தமிழக விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் அருந்தி 22 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். அந்த மாவட்டங்களைச் சேர்ந்த என்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளிருப்பு மருத்துவ நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மெத்தனால் தமிழகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு அதை விற்பனை செய்ததன் மூலம் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதில் ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வில்லியனூர் பகுதி  தட்டாஞ்சாவடி கிளை வார்டில் ஏழுமலை என்பவர் வார்டு செயலாளராக உள்ளார்.

அதேபோன்று மரக்காணம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷ சாராயத்தை பெற்ற அமரன் என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அங்கு  திமுகவைச் சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் திமுக தமிழக அமைச்சர் மஸ்தான் அவர்களுக்கு நெருக்கமானவர் என்று தற்பொழுது பல புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

இது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு உட்பட்ட நிகழ்வாகும். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. கலால் துறையும் அலட்சியப் போக்கிற்கு எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த கள்ள சாராய வியாபாரிகளுடன் புதுச்சேரியில் உள்ள ஒரு சில வியாபாரிகளும் கூட்டணி வைத்துக்கொண்டு இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

புதுச்சேரியில் இது சம்பந்தமாக யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையும், கலால் துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு இதற்கு மேலும் இதுபோன்று சம்பவங்கள் இதற்கு மேலும் நடைபெறாமல் கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடுமையாகும்.

22 நபர்கள் மரணம் அடைய முழு காரணமும் தமிழக திராவிட முன்னேற்றக் கழக அரசையே சாரும். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர், தமிழக கலால் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார்  காட்டமாக பேசி உள்ளார்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் விடியா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த மக்கள் விரோத செயலை கண்டு மனம் வெதும்பி இந்த அரசு இதற்கு மேலும் தமிழகத்தில் தொடர வேண்டுமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒட்டுமொத்த அனைத்து பிரச்சினையும் திசைதிருப்புகின்ற விதத்தில் எதற்கும் சம்பந்தமில்லாத புதுச்சேரி மாநில முதலமைச்சர் இதற்காக பதவி விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுப்பது வெட்கக்கேடான செயலாகும்.

சம்பவம் நடந்தது அனைத்தும் தமிழ்நாடு மரணத்திற்கு காரணமான மெத்தலால் வாங்கப்பட்டதும் தமிழ்நாட்டில் மரணம் அடைந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

மருத்துவ சிகிச்சையில் உள்ள அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.உண்மை நிலை இவ்வாறு இருக்க புதுச்சேரி முதலமைச்சர் இதற்காக பதவி விலக வேண்டும் என நாராயணசாமி கேட்பது ஒரு மன நோயாளியின் பிதற்றலாக இருக்கிறது.

நாராயணசாமிக்கு உண்மையில் மக்களின் மீது அக்கறை இருந்தால் அவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான தமிழக விடியா திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் அனைத்து தவறுக்கும் தானே பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாராயணசாமி கேட்பாரா?

முதலில் தமிழகம் சம்பந்தமான இந்த பிரச்சனையில் தமிழக முதலமைச்சரை பார்த்து கேள்வி கேட்டுவிட்டு பிறகு புதுச்சேரி முதல்வரை பற்றி நாராயணசாமி பேசலாம். தமிழக திமுக அரசின் மீது ஏற்பட்டுள்ள மாறாத இந்த உண்மைப் பழியை திசை திருப்பும் வேலையை திரு நாராயணசாமி அவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது ஆகும்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment