தமிழ்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையை மாநில அரசு உருவாக்கி வருகிறது.
இதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) உருவாக்கி உள்ளது. தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் இந்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கையைப் பயன்படுத்தி இது உருவாக்கப்படுகிறது.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படாத 80 க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகளைப் பயன்படுத்தி நகரங்களுக்கு இடையேயான இந்த ஹெலிகாப்டர் போக்குவரத்து தொடங்கப்படும்.
-
அமைச்சர் தங்கம் தென்னரசு
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு பிராந்திய வான்வழி இணைப்பு (TN REACH) என்பது மாநிலங்களுக்கு இடையேயான வான்வழிப் பாதைகளை வழங்கும்” என்றார்.
இந்த ஹெலிகாப்டர் சேவையானது, போதிய சாலை உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் அல்லது அவசரகால சூழ்நிலைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“