Advertisment

பிப்.19 பட்ஜெட்; கடந்த ஆண்டைப் போல்.. இந்த அதிகாரம் சபாநாயகருக்குதான்- மு. அப்பாவு

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையை பிப்.12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார்கள்- சபாநாயகர் மு. அப்பாவு

author-image
Jayakrishnan R
New Update
சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் பிப்.19ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது என சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வருகிற 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய மு. அப்பாவு, “தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையை பிப்.12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார்கள்.

Advertisment

Today News In Tamil, tamil nadu budget 2019, இன்றைய செய்திகள்

தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.

இதையடுத்து, பிப்.20ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கையும், 21ஆம் தேதி 2023-23 முன்பண மானிய செலவினங்களயும் தாக்கல் செய்கிறார்” என்றார்.

Madras HC rejects OPS plea against EPS elected AIADMK secretary

தொடர்ந்து, கடந்த ஆண்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த மு. அப்பாவு, “கடந்த ஆண்டு அரசு, சபாநாயகரால் பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு சுமூகமாக நடைபெறும்” என்றார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருக்கை பிரச்னை தொடர்பான கேள்விக்கு, “சட்டமன்றத்தில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்ற அதிகாரம் சபாநாயகருக்குதான் உண்டு” எனப் பதிலளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment