48 மணிநேரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10-க்கும் மேற்பட்டோர் பலி

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில், டெங்கு காய்ச்சலை பரவும் ஏடிஸ் கொசுக்களை கண்டறிந்து அழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில், டெங்கு காய்ச்சலை பரவும் ஏடிஸ் கொசுக்களை கண்டறிந்து அழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
degue fever, dengue fever in Tamilnadu, minister c.vijayabhaskar,Tamilnadu government, CM edappadi palanisamy,

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் டெக்கு காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2 நாட்களில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் கடந்த 5, 6 மாதங்களாக நிலைகொண்டுள்ள டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமடைந்துள்ளது. தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என கூறிவரும் அதே வேளையில், டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதுமே பரவி வருகிறது.

குறிப்பாக, சென்னையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருவண்ணாமலை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை, ஆயிரக்கணக்கிலான மக்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் சேலம், கிருஷ்ணகிரி, தேனி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், டெங்கு காய்ச்சலை பரவும் ஏடிஸ் கொசுக்களை கண்டறிந்து அழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், விடுதிகள், சமூக நலத்துறை, சுகாதார துறை ஆகிய அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு, தொடர் தணிக்கைகள் செய்து டெங்கு வராமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: