உதயநிதிக்கு அடுத்து இன்பநிதி தான் தமிழக முதல்வர்; குடும்ப புகைப்படத்துக்கு குவியும் கமெண்ட்ஸ்!

உதயநிதியின் மகன் இன்பநிதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என நான்கு தலைமுறையினரும் இடம்பெற்றிருந்தனர்.

Inban Udhayanidhi Instagram Family Picture Post Viral News Tamil : தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி. அவரின் 97-வது பிறந்த நாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், கழகத் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, தொண்டர்கள் தங்களின் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்டாலினின் பேரனும் உதயநிதியின் மகனுமான இன்பநிதி, தனது தாத்தாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

உதயநிதியின் மகன் இன்பநிதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என நான்கு தலைமுறையினரும் இடம்பெற்றிருந்தனர். அந்த புகைப்படத்தில் குழந்தையாக உள்ள இன்பநிதி தனது தாத்தா கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டும், கருணாநிதியுடனான பொன்னான தருணங்களை நினைவு கூறும் வகையிலும் இந்த புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார்.

இன்பநிதியின் பதிவுக்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும், நெட்டிசன்களும் லைக்ஸ் அளித்து வருகின்றனர். மேலும், புகைப்படக் காட்சிகளை மையப்படுத்தி பதிவின் கீழாக பலரும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

‘இந்த வாரிசு அரசியல் தான் தேவை. வாழையடி வாழையாக மக்கள் நலன் பயின்று களமிறங்குகிறார்கள்’ என ஒரு நெட்டிசனும், ‘நேற்று, இன்று, நாளை, எதிர்காலம்’ என தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தியும் நெட்டிசன் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், வாரிசு அரசியல் என்றும், உதயநிதி முதல்வரான பின், இன்பநிதி தான் தமிழக முதல்வர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Inban udhayanidhi stalin karunanidhi photo instagram viral dmk cadre

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com