கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமாரைக் காணவில்லை என அவரின் உறவினர்கள் பீளமேடு காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட வருமான வரித்துறைத் துணை ஆணையராக சிவக்குமார் பணியாற்றி வந்தார். கோவை கொடிசியாவைவை அடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சிவக்குமார் வசித்து வந்துள்ளார். கடந்த, 13-ம் தேதி இரவு வீட்டில் சிவக்குமார் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாலை திடீரென சிவக்குமார் காணவில்லை.
சிவக்குமாரின் மொபைல் போன்ற சாதனங்கள் வீட்டில் உள்ள நிலையில், அவரை மட்டும் காணவில்லை. இதனால், அதிர்சியடைந்த அவரது குடும்பதினர், அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளனர். அந்த சி.சி.டி.வி காட்சிகளில், நள்ளிரவில் சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு சிவக்குமார் வெளியேறுவது போல காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதானல், சிவக்குமாரை காணவில்லை என அவரது சகோதரர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை இருந்து தெரியவந்ததாக கூறப்படுகிறது. எனவே, குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.