ஜெயா டி.வி அலுவலகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையானது முழுமையாக நிறைவடைந்தது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த சோதனையில், சுமார் 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக ஜெயா டிவி-யின் தலைமை செயல் அதிகாரி விவேக் வீடுகளிலும் துருவி துருவி சோதனை நடைபெற்றது. இதேபோல, ஜெயா டிவி-யின் பொது மேலாளர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக 5 நாட்கள் சோதனை நடத்தப்பட்ட நிலையில், குறிப்பாக ஜெயா டிவி-யின் அக்கவுண்ட் பிரிவு மேலாளர்கள், மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவை வாக்கு மூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனங்களில் எடுத்துச் சென்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வருமான வரி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
106 மணி நேர சோதனை, பல்லாயிரக்கணக்கில் ஆவணங்கள் : ஐ.டி. அதிகாரிகளுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு ஓய்வு இல்லை