அமைச்சர் செந்தில் பாலஜிக்கு தொடர்புடைய 200க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சாராம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து கடந்த வாரம் மனு கொடுத்தார். இந்நிலையில் இதில் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆளுநரின் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. இதுபோல வாட்ச் விவாகரத்திலும் அண்ணாமலைக்கும் செந்தில் பாலஜிக்கும் மோதல் போக்கு நிலவியது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”