scorecardresearch

இந்தியாவின் நீளமான ஸ்கை வாக்: சென்னை தி. நகர் பயணிகள் ஹேப்பி அண்ணாச்சி!

மாம்பலம் ரயில் நிலையத்தையும், தி.நகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலம் கொண்ட ஸ்கைவாக், ஸ்மார்ட் சிட்டி நிதியில் ரூ.28 கோடியில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ளது.

tnagar

இந்தியாவிலேயே மிக நீளமான ஸ்கைவாக், சென்னை தி.நகரில் மக்களுக்காக விரைவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் ரயில் நிலையத்தையும், தி.நகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் 570 மீட்டர் நீளத்திற்கும், 4.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட ஸ்கைவாக், ஸ்மார்ட் சிட்டி நிதியில் ரூ.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான ஸ்கைவாக் ஒன்றை சென்னையில் இம்மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ஸ்கைவாக்கின் இரு முனைகளிலும் லிஃப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு, பயணிகளுக்கு வசதியாக ஓய்வறைகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த கட்டுமானம் 2020 இல் தொடங்கியது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தாமதமானது.

தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் இந்தியன் எஸ்பிரஸிடம் கூறுகையில், சென்னையின் பரபரப்பான பகுதியான தி.நகரில் ஸ்கைவாக் கட்டுவது சவாலானது என்றார்.

“இந்த ஸ்கைவாக் வசதி, தி.நகர் ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் இணைக்கிறது. இது பாதசாரிகளுக்கு உதவும். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, ​​ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலால், ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மக்கள் நெரிசலான தெருவில் தங்கள் கனமான பைகளுடன் தங்கள் இடத்தை அடைய வேண்டியிருந்தது, மேலும் இந்த பிரத்யேக நடைபாதை ஸ்கைவாக் அந்த பிரச்னைகளை சமாளிக்க அவர்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் கூறினார்.

இந்த ஸ்கைவாக் வசதி கட்டுமானத்திற்காக கடைகளை அகற்றுவதில் சிரமத்தை எதிர்கொண்டதாகவும், ஆனால் தெருவோர வியாபாரிகளுக்கு பொருத்தமான மாற்று இடங்களை வழங்குவதாக உறுதியளித்த பின்னர் அதைச் செய்ததாகவும் அவர் கூறினார்.

“மாற்றுத்திறனாளிகளுக்கு சில சக்கர நாற்காலிகள் வைக்க திட்டமிட்டுள்ளோம். மக்கள் அவ்வளவு தூரம் நடப்பது சிரமமாக இருந்தால், விமான நிலையங்களில் பொதுவாகக் காணப்படும் வாக்கலேட்டரை வைத்திருக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பொதுவாக மூடிய இடங்களில் பயன்படுத்தப்படுவதால், அவற்றை முறையாக பராமரிப்பது சவாலானதாக இருக்கும். இதேபோன்ற ஸ்கைவாக்கை வேறொரு இடத்தில் அமைக்கும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாலத்தை யாரும் ஆக்கிரமித்து பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடக்காதவாறு, ஸ்கைவாக்கை கண்காணிப்பதாக அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: India largest skywalk in chennai tnagar will open soon

Best of Express