‘இந்தியன் எக்ஸ்பிரஸ் டிஜிட்டல்’ வெளியிட்டுள்ள தமிழ் இணைய செய்தித் தளம்!

2018 அக்ஷய திரிதியைக்குள், மற்ற சில மொழிகளின் இணைய செய்தி தளங்களும் தொடங்கப்படும்.

By: April 28, 2017, 9:19:35 AM

நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில், நமது நிறுவனர் ஸ்ரீ ராம்நாத் கோயன்கா அவர்கள் நிறைவேற்றிய விஷயங்கள் குறித்து ஒருநாளும் ஈர்க்கப்படாமல், பிரமிப்படையாமல் இருந்ததில்லை. அவர், சுதந்திர பத்திரிகைக்காக போராடும் ஒரு தைரியமான போராளியாக அறியப்பட்டார். ஆனால், இன்று அவரை ஒரு துணிச்சலான தொழிலதிபராக நாம் பார்க்கிறோம். 70-களின் ஆரம்பக் கட்டத்தில், மூலதன செலவு 30 சதவீதம் இருந்த போதும், இந்தியா முழுவதும் 12 உள்ளூர் மொழிகளில் செய்தித் தாள்களை வெளியிட்டார்; விலையுயர்ந்த உள்ளூர் அச்சிடும் வசதிகள் மற்றும் சுய ஆசிரியர் குழுக்கள்கொண்டு இதனை செயல்படுத்தினார். அவர் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரிவாக்க யுக்தியை மேற்கொண்டதால், 70 சதவீதம் நாட்டின் விளம்பரம் மற்றும் செய்தித் தாள்களின் வருமானம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறைகளிடம் இருந்து வந்தது. உண்மையைத் தொடர வேண்டும் என்பதால், எக்ஸ்பிரஸ்ஸின் வாடிக்கையாளர்கள் பொய்யான வழியை அடிக்கடி அழித்தார்கள்.

இந்த ஒரு அர்ப்பணிப்பால் தான், அவரது வாசிப்பாளர்களுக்காக 12-ல் 9 செய்தித்தாள்களை அந்தந்த மொழிகளில் மிகப்பெரிய அளவிற்கு தொடங்கினார்.

இன்று, அவரது 113-வது பிறந்தநாள் விழாவில், அவரது நோக்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, சவால்களை சந்திக்க விரும்பும் அறிவான இளம் இந்தியர்களுக்காக சுயமான செய்திகள் மற்றும் ஆய்வுகளை, நம்பகமான ஆதாரங்களுடன் தர தொடர்ந்து முயற்சி செய்யும் விதமாக, எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் பெருங்குடும்பமான, #அறிவார்ந்தஇந்தியன் என்று நாம் அழைக்கும், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸி’ன் தமிழ் இணைய பதிப்பான ‘ஐஇதமிழ்’-ஐ தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ராம்நாத் கோயன்காவின் அடையான சின்னமான ‘துணிச்சலான பத்திரிகை’ எனும் மந்திரம் அனைத்து மொழிகளில் ஊடுருவி உள்ளது என நம்புவோம். இந்த காரணத்தினால் தான், நம்முடைய மராட்டிய செய்தித்தாள்களின் இணையதளமான லோக்சத்தா.காம் அந்த மொழியில் மிகப்பெரியதாக உள்ளது. மீண்டும் அதே காரணத்தினால், ஜன்சத்தா .காம் ஹிந்தியில் மிக வேகமாக வளரும் செய்தித் தளமாகவும், கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்ட ஐஇமலையாளம்.காம், அந்த மொழியில் மிக வேகமாக வளர்ந்து வரும் தளமாக உள்ளது.

அதனால், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய இணைய செய்தி நிறுவனமாக எங்களை உருவாக்கிய உங்கள் அனைவரையும் உண்மையாக மதிக்கின்றோம். உங்களது இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக, 2018 அக்ஷய திரிதியைக்குள், மற்ற சில மொழிகளின் இணைய செய்தி தளங்களும் தொடங்கப்படும்.

புதிய வாசிப்பாளர்கள் ieMalayalam.com and ieTamil.com. எனும் தளங்களில் இணைய வரவேற்கிறோம்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ன் இயக்குனர் அனந்த் கோயன்கா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Indian express digital launches ietamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X