ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்.
நாடு முழுவதும் 110 ரயில் நிலையங்கள் விரைவில் உலகத் தரம் வாய்ந்த இந்திய ரயில் நிலையங்களாக மாற தயாராகி வருவதாக இந்திய ரயில் மறுவடிவமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் தலைமை நிர்வாகியும், நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் குமார் லோகியா தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஆண்டுகளில், நாடு முழுவதும் 110 ரயில் நிலையங்களில், 60 நிலையங்கள் ஐ.ஆர்.எஸ்.டி.சி யால் மாற்றப்படுகின்றன, மீதமுள்ள 50 நிலையங்கள் ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தால் (ஆர்.எல்.டி.ஏ) மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளன.
வரவேற்கத்தக்க முயற்சி
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கிட்னி தினம் மார்ச் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீரக பாதிப்புக்கு என்ன காரணம், வராமல் தடுப்பது எப்படி, வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத் தினத்தின் முக்கிய நோக்கம். ‘வருமுன் தடுத்தல் மற்றும் சமமாக கவனித்தல் மூலம் ஆரோக்கியமான சிறுநீரகம் அனைவருக்கும்’ என்பது இந்தாண்டு மையக் கருத்தாக உள்ளது.
உப்பு ரொம்ப தப்பு
வளர் இளம் பருவத்தில், ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில், சுரப்பும் அதிகமாக இருக்கும். இளம் பெண்களுக்கு, 14 -18 வயது வரையிலும், பருக்கள் அதிகமாக வருவதற்கு இந்த இரண்டும் முக்கிய காரணங்கள். மிக அதிக அளவில் பரு வரும் வயது, 17 – 21 வயது வரையிலும். இது தவிர, மரபியல் காரணங்களாலும், பருக்கள் வரலாம்
விழிப்புடன் இருப்போம்
கே.ஆர்.பி., அணையில், ஆறு ஷட்டர்களை பொருத்தும் பணி நிறைவடைந்தது. கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையின் பிரதான எட்டு ஷட்டரில், முதல் ஷட்டர் கடந்த, 2017 நவ., 29ல் உடைந்தது. உடைந்த ஷட்டரை அகற்றி விட்டு, கடந்த 2018 ஆக., 14ல் புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது. இதையடுத்து, 19 கோடி ரூபாய் செலவில், மற்ற ஏழு ஷட்டர்களையும் புதிதாக பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பழைய ஏழு ஷட்டர்கள் அகற்றப்பட்டு, கடந்த ஜன.,18 முதல், புதிய ஷட்டர் அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த மாதம், 15 வரை, 2, 3, 4, 7, மற்றும், 8வது என, ஐந்து ஷட்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், நேற்று, 6வது ஷட்டர் பொருத்தும் பணியும் முடிந்து, வெல்டிங் வைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம், 26 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 52 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil