ஹாய் கைய்ஸ் : அதென்ன குப்பைத்தொட்டியா, திருந்துங்கள் மக்களே...

Bio toilet in trains : நான்கு பயோ டாய்லெட் பொருத்த, 4.13 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பயணிகள் டாய்லெட்டில் போடும் கழிவுகளால், அவை...

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நாம நிகழ்ச்சிக்கு போவோம்.

பொறுப்பற்ற சில பயணிகள், காலி தண்ணீர் பாட்டில்களை வீசுவதால், ரயில்களில் ‘பயோ டாய்லெட்’கள் செயலிழப்பதுடன், லட்சக்கணக்கில் செலவு ஏற்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் புலம்புகின்றனர்.நாடு முழுவதும் பசுமை ரயில் தடங்களை, உருவாக்கும் விதமாக ‘பயோ டாய்லெட்’ எனும் உயிரி கழிவறை, எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதற்கட்டமாக பொருத்தப்பட்டு வருகிறது. .நாப்கின், தண்ணீர் பாட்டில்கள், கழிவுப்பொருட்களை பயணிகள் உள்ளே போடுவதால், பயோ டாய்லெட் செயல்படாமல் பாழாகி வருவதாக, ரயில்வே அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.நான்கு பயோ டாய்லெட் பொருத்த, 4.13 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பயணிகள் டாய்லெட்டில் போடும் கழிவுகளால், அவை செயலிழந்து வீண் செலவை ஏற்படுத்துகிறது.

மக்களும் திருந்தணும்..

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உலகம் தோன்றிய நாள் முதல் அனைவரும் பயன்படுத்தும் உன்னத வார்த்தை நன்றி என்பது. உதவி செய்தவரின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது, அவரை மேலும் உதவி செய்யத் துாண்டுகிறது. இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல் சேவைகளின் வளர்ச்சி. ஒற்றுமையின் உன்னதம், மானுடத்தின் அடையாளம்.நன்றி என்பது தோன்றி மறையும் நீர்க்குமிழி அல்ல. காலங்காலமாக பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவதொரு சூழலில், அவரவர்கள் செய்த உதவிக்கு ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் உன்னதச் சொல் இது. கடைசி நேரத்தில் அவர் செய்த உதவி இருக்கு பாருங்க, அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்’ என நெகிழ்ச்சியோடு சொல்பவர்களும் உண்டு.நன்றி என்பது வெறும் வார்த்தையல்ல, அது வாழ்க்கை. அது வாயிலிருந்து வரக்கூடாது. இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டும்.

கோடானகோடி நன்றிகள் ஆண்டவரே

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்வு எழுதும் நேரத்தை, இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மூன்று மணி நேரமாக, தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாளை வாசித்து பார்க்க, காலை, 10:00 முதல், 10:10 மணி வரை, 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் விபரங்களை, தேர்வறை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்க, 10:10 முதல், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின், 10:15 முதல், பகல், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து மாணவ – மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் தி பெஸ்ட்

கோவிட் – 19′ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ்’ உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ், தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

முடியல

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை நல்லதையே சிந்திப்போம்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close