Advertisment

விளம்பரங்களில் காட்டப்படுவது போல் அல்ல இது! ஆபத்தில் இருக்கும் நம் வீடுகள்!

இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலேயே 1000 மடங்கு கூடுதலாகத் தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காரீயம் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

author-image
Nithya Pandian
New Update
International Lead Poisoning Prevention Week 2020 Ban Lead Paint

International Lead Poisoning Prevention Week 2020 : நாம் வாழும் வீடும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளும் ஆரோக்கியமானதாக இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வீட்டிற்கு வெளியே எவ்வாறாக இருப்பினும் வீட்டினுள் தூய்மையை பேணவே நாம் அனைவரும் விரும்புவோம். நம்முடைய உறவுகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடனும் வாழ்வதையே நாம் வரவேற்போம். ஆனால் நம்முடைய வீடுகள் பாதுகாப்பானதா?

Advertisment

வீட்டில் நாம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருமுறை அடிக்கும் பெய்ண்ட்களில் அதிக அளவு காரியம் என்ற தனிமம் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இந்த நஞ்சு கலந்த வர்ணங்களுக்கு நடுவில் இருப்பதால் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்த பின்னர் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் UN Environment Programme (UNEP), அரசுகள், சிவில் சொசைட்டி மற்றும் உலகளாவிய அளவில் பொதுமக்கள் பலரால் இன்று முதல் காரீய நஞ்சு தடுப்புக்கான சர்வதேச வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : தமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை!

காரீய அமிலம் மற்றும் கனிமத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், காரீய கனிம ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து ஒழுங்குமுறைகளை உலக நாடுகள் பின்பற்ற விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் வாரமாக அமைகிறது. இந்த ஆண்டு காரீய நஞ்சு தடுப்புக்கான சர்வதேச வாரம் அக்டோபர் 25 முதல் அக்டோபர் 31ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் பலரின் கூட்டு முயற்சியில் செயல்படும் அருளகம் அமைப்பின் செயலர் பாரதிதாசனிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டு பேசியது.

”காரீயமானது பல்வேறு வடிவங்களில் நம் வீட்டை வந்தடைகிறது. அதில் மிக முக்கியமானது பெய்ண்ட்கள். நிறத்திற்காகவும், பளபளப்பிற்காகவும், உலர்த்தியாகவும், மழைகாலத்தில் ஏற்படும் அறிப்பினை தடுப்பதற்காகவும் இந்த காரீயம் சேர்க்கப்படுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் நேரடியாக கதவு, ஜன்னல் மற்றும் சுவர்களில் வாய் வைத்து விளையாடும் காரணத்தால் நேரடியாக அவர்களின் உடலுக்குள் செல்கிறது. காரிய உள்ளீடு ஐ.க்ஃயூ திறனை குறைக்கும். படிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆண்ட்டி-சோசியலாக அந்த குழந்தைகள் வளர்வதற்கான வாய்ப்பினை தருகிறது.

இந்த காரீயம் நிறைந்த பெய்ண்ட் சிதைவுகள் மற்றும் தூசிகளை சுவாசிப்பதால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு Rule 13 of the Environment (Protection) Rules 1986 ஐத் தொடர்ந்து Regulation on lead contents in Household and Decorative Paints Rules 2016 வெளியிட்ட அறிக்கையில் காரீயமானது 90 ppm-க்கு மேல் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் பல நிறுவனங்கள் இந்த உத்தரவை கடைபிடிப்பதில்லை. டாக்சிக்ஸ் லிங்க் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலேயே 1000 மடங்கு கூடுதலாகத் தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காரீயம் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அழிவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை உணர்த்தவே இந்த வாரத்தை கடைபிடிக்கின்றோம்” என்று அவர் கூறினார்.

உலக அளவில் காரீய கேஸ்லைனிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரீயம் கலந்த பெய்ண்ட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட, 50% மேற்பட்ட நாடுகள் இன்னும் காரீயம் கலந்த பெய்ண்ட் பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய உறவுகளில் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இந்த முன்னெடுப்பை நாம் மேற்கொள்வோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment