New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a204.jpg)
கார்த்திக் சிதம்பரத்திடம், தற்போது சிபிஐ வாக்குமூலம் பதிவு செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்குவதில், முறைகேடு நடந்ததாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் தற்போது சிபிஐ சோதனை நடத்திவருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், "மத்திய அரசு, சிபிஐயினை தவறாக வழி நடத்துகிறது. அதைப்பயன்படுத்தி என் மீதும், என மகன் மற்றும் அவரின் நண்பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தப் பிரச்னையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்" என்றார்.
அதேபோல், கார்த்திக் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், "என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், இதுவொரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றார்.
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திடம், தற்போது சிபிஐ வாக்குமூலம் பதிவு செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் அளித்த வாக்குமூலம் குறித்த விவரங்கள் தெரியவில்லை. முறையாக, சிபிஐ அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பின்னரே, இதுகுறித்த முழு தகவல்களும் வெளியாகும் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.