Advertisment

கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு : ‘ஆவணங்கள் கைப்பற்றவில்லை’ என கார்த்தி வழக்கறிஞர் தகவல்

கார்த்தி ப.சிதம்பரம் இல்லத்தில் ஐ.டி., மற்றும் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை என தெரிகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு : ‘ஆவணங்கள் கைப்பற்றவில்லை’ என கார்த்தி வழக்கறிஞர் தகவல்

கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் ஐ.டி., மற்றும் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை என தெரிகிறது.

Advertisment

ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது மத்திய ஏஜென்சிகள் தொடர்ந்து விசாரணை வளையங்களை விரிவாக்கி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை இல்லத்தில் இன்று ரெய்டு நடந்தது. இதில் வருமான வரித்துறை ஒரு குழுவாகவும், அமலாக்கத்துறை மற்றொரு குழுவாகவும் செயல்படுவதாக தெரிகிறது.

கார்த்தி ப.சிதம்பரம் வீட்டில் இன்று காலை 8 மணிக்கு இந்த ரெய்டு தொடங்கியது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதையும் மத்திய ஏஜென்சிகள் வெளியிடவில்லை. ஆனால் ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாக கூறப்பட்ட வழக்கில் இந்த சோதனை நடப்பதாக தெரிய வந்திருக்கிறது

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் இல்லத்தில் நடைபெறும் ரெய்டு தொடர்பான LIVE UPDATES

பகல் 11.05 : கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கூறுகையில், ‘காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்து சோதனை நடத்தினர். இதற்கான உத்தரவை அமலாக்கத்துறை கூடுதல் இயக்குனர் பிறப்பித்திருப்பதாக ஆவணங்களை காட்டினர்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இந்த ரெய்டை நடத்துவதாக கூறினர். இதில் எந்த ஆவணத்தையும் அவர்கள் கைப்பற்றவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு கடந்த வியாழக்கிழமை கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்றவர் ஆஜரானார். எனவே ஆஜர் ஆகலைங்கிறது தவறான தகவல்!’ என்றார்.

பகல் 11.00 : அமலாக்கத் துறை சோதனை நிறைவு பெற்றது. கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் ஒருவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து இந்த ரெய்டு தொடர்பாக விளக்கம் கொடுத்தார்.

காலை 10.00 : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாகவும் ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காலை 9.45 : இந்த வழக்கில் அமலாகக்த்துறை அனுப்பிய சம்மன் அடிப்படையில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. எனவே ஜனவரி 16-ம் தேதி ஆஜராகும்படி கடந்த வியாழக்கிழமை அமலாக்கப்பிரிவு புதிதாக சம்மன் அனுப்பியது. அதற்குள் இந்த ரெய்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

காலை 9.30 : சிபிஐ அளித்த தகவல்கள் அடிப்படையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா இயக்குனர்களான பீட்டர் முகர்ஜி, இந்திரா முகர்ஜி ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டத்திற்கு புறம்பான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்க கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்காக கார்த்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் சிபிஐ கூறியது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்தது.

காலை 9.15 : டெல்லியில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய வளாகங்களிலும் இந்த ரெய்டு நடக்கிறது.

காலை 9.00 : இந்த ரெய்டு குறித்து தகவல் கிடைத்து மீடியா அங்கு குவிந்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

காலை 8.00 : 9 அதிகாரிகளைக் கொண்ட அமலாக்கப் பிரிவு குழு ஒன்று சென்னை நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் இல்லத்திற்கு வந்தது. வீட்டுக்குள் சென்று ஆவணங்களை பெற்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 

 

P Chidambaram Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment