Advertisment

ஓ.பன்னீர்செல்வம் போன் ஒட்டுக் கேட்கப் படுகிறதா? டெல்லியில் கே.பி.முனுசாமி விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி இடையே பூசல் என்கிற சூழலில், ஓபிஎஸ் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? என்கிற கேள்விக்கு டெல்லியில் கேபி.முனுசாமி பதில் அளித்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
o.panneerselvam, tamilnadu government, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, election commission of india, ttv dhinakaran, k.p.munusamy

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி இடையே பூசல் என பேசப்படும் சூழலில், ஓபிஎஸ் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? என்கிற கேள்விக்கு டெல்லியில் கேபி.முனுசாமி பதில் அளித்தார்.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே பூசல் நிலவுவதாக சமீப நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. அண்மையில் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழக மின் துறைக்கு கூடுதல் நிலக்கரி கேட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை அவர் மோடியிடம் கொடுத்தார். ஆனால் அன்று டெல்லியில் இருந்த அந்தத் துறை அமைச்சர் தங்கமணிக்கு இந்த சந்திப்பில் பங்கேற்க அனுமதி இல்லை.

ஓ.பன்னீர்செல்வம், கட்சியிலும் ஆட்சியிலும் தான் புறக்கணிக்கப்படுவது குறித்து மோடியிடம் முறையிட இந்த சந்திப்பை பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. காரணம், ஓபிஎஸ் தனது அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி.யை மட்டும் மொழிபெயர்ப்புக்காக இந்த சந்திப்பின்போது உடன் வைத்துக்கொண்டார்.

இந்தச் சூழலில் இரட்டை இலை சின்னம் வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று மாலை 4.15 மணியளவில் டெல்லியில் மைத்ரேயன் வீட்டில் முனுசாமி நிருபர்களிடம் பேசினார்.

அப்போது, ‘தேர்தல் ஆணையத்தில் நீங்கள் போர்ஜரி ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவரே ஒரு போர்ஜரி! போர்ஜரிக்கு நல்லவர்களை பார்த்தால், போர்ஜரியாகத் தெரியும். நாங்கள் முறைப்படி புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை சி.டி வடிவில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்.

ஒபிஎஸ் தலைமையில் இரு கோரிக்கைகளை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தினோம். அதில் ஒன்று, சசிகலா குடும்பத்தின் வெளியேற்றம்! அந்தக் குடும்பத்தில் சசிகலா மட்டும்தான் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். தினகரனை 7 ஆண்டுகளுக்கு முன்பே அம்மா தூக்கி எறிந்துவிட்டார். அவர் தனக்கு இரட்டை இலை வேண்டும் என கேட்பதை எப்படி ஏற்க முடியும்?’ எனக் கேட்டார் முனுசாமி.

‘ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுகிறார்களே?’ எனக் கேட்டபோது, ‘எந்த ஆதாரத்தை வைத்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள்? ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் அந்த துறை அமைச்சருடன் ஆலோசித்து முதல்வர் முடிவுகளை எடுக்கிறார். ஜெயலலிதா ஆட்சியை இருவரும் இணைந்து அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் நடத்துகிறார்கள். எனவே இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ என்றார்.

‘ஓ.பன்னீர்செல்வத்தின் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறுகிறார்களே?’ என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முனுசாமி, ‘இது தவறான தகவல்! இப்படி கேள்வி கேட்டு என்னிடம் இருந்து ஏதோ பதில் வரவைக்க விரும்புகிறீர்கள். முதல்வரும், துணை முதல்வரும் நாட்டு நலன் கருதி செயல்படுகிறார்கள். அவர்களைப் பற்றி ஆதாரமற்ற செய்திகளை கேள்விகளாக கேட்கவேண்டாம்.

ஆட்சி நல்ல முறையில் இயங்குகிறது. இருவரும் இந்த ஆட்சியின் மூலமாக புரட்சித்தலைவி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்சி மூலமாக எதிர்காலத்தில் பெரிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். அதனால் இது போன்ற தகவல்களை பரப்புகிறார்கள் என நினைக்கிறேன்.’ என்றார் முனுசாமி.

‘தம்பிதுரை தனது அணிக்கு வரவேண்டும் என திருச்சியில் டிடிவி தினகரன் வைத்த அழைப்பு, பிரிந்த அனைவரும் இணையவேண்டும் என தம்பிதுரை கொடுத்த பதில்’ ஆகியவை குறித்தும் முனுசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘டிடிவி கூறுவதைப் பார்த்தால், அவர் தனியாக இருக்கிறார். அவர் இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். கட்சி நிர்வாகிகளை மிக மோசமாக புலிகேசி என்றெல்லாம் விமர்சிக்கிறார்.

அவர் கட்சியில் இல்லாத நபர், அம்மாவால் தூக்கி எறியப்பட்டவர், பெரா கைதி, தினமும் நீதிமன்றம் சென்று கொண்டிருப்பவர். கேட்டால், ‘நான் சிறைக்கு சென்றவன்’ என்கிறார். தியாகம் செய்துவிட்டு சிறைக்கு சென்றவர் அல்ல அவர். குற்றம் புரிந்துவிட்டு சிறைக்கு போனவர். அவரது குடும்பத்திற்கு அதிமுக-வில் இடமில்லை என்பது கட்சி எடுத்த முடிவு.’ என்றார் முனுசாமி.

 

Ttv Dhinakaran K P Munusamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment