திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (45). இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இணைந்துள்ளார்.
பின்னர் அவரது பெயரை சுவாமி பவதுதா எனவும் மாற்றிக் கொண்டுள்ளார். இதனிடையே கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் இருந்த கணேசன், கடந்த 28 ஆம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஸ்ராஜா ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்ம், கோவை