ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்குவதில், முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில், இன்று காளீஸ்வரி ரீஃபைனரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, மதுரை என அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் ரெய்டு நடந்துவருகிறது. முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சோதனை நடக்கும் அனைத்து இடங்களிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.