Advertisment

உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தவே வருமான வரித்துறை சோதனை: திருமாவளவன்

அதிமுக-வில் உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, It Raid in Chennai, Jaya TV Office, IT Raid in Kodanadu Estate, Thanjavur, Viduthalai Chiruthaigal Katchi, Thol. Thirumavalavan, BJP,

அதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தொடர்புடைய இடங்கள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை, பெங்களூர் என 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்போது: சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது என்பது அரசியல் நோக்கம் கொண்டது. அதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

It Raid Vck Income Tax Department Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment