சசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடைய இடங்களில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனையானது 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இதன் காரணமாக டிடிவி தினகரன், அந்த அணிக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள டிடிவி தினகரன் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த வருமான வரித்துறை சோதனை. முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என கோரிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சசிகலா, டிடிவி தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த வருமான வரித்துறை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ஹெச்.ராஜாவின் ட்வீட்...
தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தெரியாத ஜோஸ்யரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்பவாவது புரிந்திருக்கும்.
— H Raja (@HRajaBJP) November 10, 2017
விவேக் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை தொடர்கிறது. மன்னார்குடியில் திவாகரன், டிடிவி தினகரன் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடு என 15 இடங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெறுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையை தொடர்ந்து நடத்தி வரும் இடங்கள் குறித்து பார்க்கலாம்.
- தஞ்சாவூரில் உள்ள மகாதேவன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோரின் வீடுகள்
- நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை.
- சென்னையில் உள்ள ஜெயா டி.வி அலுவலகம், டாக்டர்.நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் அலுவலகம் மற்றும் கிருஷ்ணபிரியா வீடு ஆகிய இடங்களில் தொடர்கிறது ரெய்டு.
- கே.கே நகரில் உள்ள டிடிவி தினகரனின் உதவியானர் ஜனார்தனன் வீட்டில் சோதனை
- டிடிவி தினகரனின் உறவினர்கள் வெங்கடேஷ், பாஸ்கரன் வீடுகளில் தொடர் சோதனை
- சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் வீட்டில் சோதனை
- சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள ஜாஸ் சினிமாஸ்.
- சென்னை போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டி.வி அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை
- காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமாத்தூரில் உள்ள மிடாஸ் மதுபான தொழிற்சாலையில் சோதனை நடத்தப்படுகிறது. இதன்காரணமாக தொழிற்சாலை ஊழியர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இளவரசியின் மகன் விவேக் வீடு.
- டிடிவி தினகரன் ஜோதிடர் சந்திரசேகரின் வீடு.
- கோடநாடு எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்ட மேலாளர் நடராஜனிடம் விசாரணை.
- மன்னார்குடியில் உள்ள திவாகரன், தினகரன் வீடுகள், ஆதரவாளர்கள் உள்பட 15 இடங்களில் தொடர் சோதனை
- திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரியில் சோதனை.
- கோவையில் தொழிலதிபர்கள் ஓ ஆறுமுகசாமி, சஜ்ஜீவனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள லஷ்மீ ஜூவல்லர்ஸ்-ல் 2-வது நாளாக சோதனை
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள காகித ஆலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது.
நேற்று ஒரே நேரத்தில் 187 நிறுவனங்களில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, 40 இடங்களில் முடிவடைந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 147 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.