ஜெயலலிதாவின் உணவுக்காக 75 நாட்களில் ரூ. 1.17 கோடி செலவு - அப்போலோ தகவல்

லண்டனில் இருந்து வந்து, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலேவிற்கு மருத்துவக்கட்டணமாக ரூ. 92.7 லட்சம் வழங்கப்பட்டது.

J. Jayalalitha Appollo Hospital Days : தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில், உணவிற்காக மட்டும் சுமார் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

செல்வி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி. அப்போலோ மருத்துவமனை இன்று ஆறுமுகசாமி விசாராணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் உணவிற்காக மட்டும் ரூபாய் 1,17,04,925 செலவாகியுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

J. Jayalalitha Appollo Hospital Days

J. Jayalalitha Appollo Hospital Days செலவுகள் குறித்து அப்போலோ

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக ரூ.6.85 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் அப்போலோ நிர்வாகம் கூறியிருக்கிறது.

லண்டனில் இருந்து வந்து, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலேவிற்கு மருத்துவக்கட்டணமாக ரூ. 92.7 லட்சம் வழங்கப்பட்டது.

உணவு செலவு இல்லாமல் இதர செலவுகளான பிசியோதெரப்பிக்காக சுமார் 1.29 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த வார்டிற்கான செலவு ரூ. 24 லட்சம்.

சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கியதற்கான அறை வாடகை 1.24 கோடி என்றும் அப்போலோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தொடர் நெருக்கடியில் அமைச்சர் விஜயபாஸ்கர் : இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close