Advertisment

பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை

அமித் ஷா தலைமையிலான கட்சியில் தேசிய பொதுச் செயலலாளராக இருந்த ராம் மாதவ், பி முரளிதர் ராவ், அனில் ஜெயின், சரோஜ் பாண்டே ஆகியோரும் பட்டியலில் இடம் பெறவில்லை.

author-image
WebDesk
New Update
H Raja tweet on Vinayagar Chathurthi, Aiadmk BJP war

ஹெச்.ராஜா

பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டது . பாஜக தலைவராக பொறுப்பேற்ற எட்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர்,தேசியச் செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை ஜே.பி நட்டா வெளியிட்டார்.

Advertisment

இதுநாள் வரையில்,  பாஜக வின் தேசியச் செயலாளர் பதவியில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹெச். ராஜா தற்போது அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

 

பட்டியலில் காணாமல் போனவர்களில் முக்கியமானவர்கள்

அமித் ஷா தலைமையிலான கட்சியில் தேசிய பொதுச் செயலலாளராக இருந்த ராம் மாதவ், பி முரளிதர் ராவ், அனில் ஜெயின், சரோஜ் பாண்டே ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும், அட்டைகளிலும் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சரவைக்கு  பரிசீலிக்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமன் சிங், வசுந்தரா ராஜே, பைஜயந்த் பாண்டா, மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபார் தாஸ், மேற்கு வங்கத் தலைவர் முகுல் ராய், கேரள தலைவர் பி அப்துல்லா குட்டி, ரேகா வர்ணம் அன்பூர்ணா தேவி,பாரதி பென் ஷியால் போன்றோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அருண் சிங் எம்.பி., மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா, கர்நாடகாவைச் சேர்ந்த சி.டி ரவி உள்ளிட்ட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பியூஷ் கோயல் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதிலிருந்து நீண்ட காலமாக காலியாக உள்ள  பொருளாளர் பதவிக்கு ராஜேஷ் அகர்வாலை நட்டா நியமித்துள்ளார்.

கர்நாடக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நட்டா  தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை என்ற செய்தாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

H Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment