வருமான வரி சோதனை ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, சென்னை அடையாறு இல்லத்தில் கோ பூஜை நடத்தினார் டிடிவி தினகரன்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை ஒருபுறம் நடைபெறும் வேளையில் சென்னை அடையாறு இல்லத்தில் கோ பூஜை நடத்தினார். வீட்டு வாசலில் பசு ஒன்றை அழைத்து வந்து பூஜை நடத்தியபோது, டிடிவி தினகரன், அவரது மனைவி அனுராதா ஆகியோர் பசுவிற்கு வாழைப்பழங்களைக் கொடுத்தனர்.
வருமான வரி சோதனைக்கு நடுவில் கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்
#TTVDhinakaran #ITRaid #IncomeTax pic.twitter.com/vjzriwY4HO— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 9 November 2017
‘தாமரை’ வைத்து வழிபட்டது எதற்கு?-
டிடிவி தினகரன் கோ பூஜை நடத்தியது என்பது குறித்து சமூக வலைதளங்ளில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அப்படி பரவிய தகவலில் இதுவும் ஒன்று, ” கோ என்பது லக்ஷ்மி அம்சம். வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. செந்நிறத் தாமரையில் நிற்பவள் லக்ஷ்மி. அஷ்டபுஷ்பங்கள் என்று சொல்லும் போது, ரத்தபுஷ்பம் என சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுகிற செந்நிறத் தாமரைப் பூவுக்கு தனி மகத்துவமும் வீரியமும் உண்டு. அதனால் தாமரையைப் பயன்படுத்தி கோபூஜை செய்வதே உத்தமம். கோபூஜை செய்வதால், கோ என்பது லக்ஷ்மியின் அம்சம் என்பதால், இழந்ததைப் பெற முடியும். எதையும் இழக்காமல் இருக்கும் வலிமையைத் தரும். லக்ஷ்மி கடாட்சம் நம்முடனேயே இருக்கும்.’’என தஞ்சாவூர் ரமேஷ் ஜம்புநாத குருக்கள் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜெயா டி.வி. அலுவலகம் உள்பட 187 இடங்களில் ரெய்டு : தமிழகம் கண்டிராத மெகா சோதனை