வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பத்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தீபா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாட அதிகாரிகள் அதிகாரிகள் அறிவுறுத்திதாக தகவல் தெரிவிக்கின்றன.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், எனவே சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் கட்சினர் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதலமைச்சராக பதவிறேற்ற ஓ பன்னீர் செல்வம், சசிகலாவின் தலையீட்டால் விரைவிலேயே ராஜினாமாவும் செய்தார். அதுவரை ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பாத பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை ஒ பன்னீர் செல்வம் எடுத்தததால், அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அப்போது, ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை வேண்டும் என்றும், ஜெயலிதா வேதா இல்லத்தை அரசுடைமையாக்க வேண்டும் ஓ பன்னீர் செல்வம் அணியின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டுமானால், இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கோரப்பட்டது.
அணிகள் இணைப்பை கருத்தில் கொண்டு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதாவின் வேதா இல்லாம் அரசுடைமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதன் காரணமாக பிளவுபட்ட அதிமுக அணிகள் மீண்டும் ஒன்றிணைந்தன. பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு எதிர்வித்தார். எனவே, ஜெயலலிதாவின் வாரிசு தாங்கள் தான் என்பதற்கு சான்றிதழ் வழங்கக் கோரி, சென்னை மைலாப்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தீபக், தீபா தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தீபக் வசிக்கும் தி.நகர், கிண்டி வரம்புக்குள் வருவதால், அந்த விண்ணப்பம் கிண்டி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பபட்டது. ஆனால், குடும்ப உறுப்பினர்களுக்கு(கணவர், மகன், மகள்) மட்டுமே வாரிசு சான்றிதழ் வழங்க முடியும் எனகூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, சிவில் நீதிமன்றத்தை அணுக, தீபக்கிற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.