ஆணைய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா,டாக்டர் கே.எஸ்.சிவகுமார்,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதரத்துறை முன்னாள் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கூறியது. மேலும் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில் ஆணையத்தின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார் விஜயபாஸ்கர். ஆணையத்தின் கருத்தில் உண்மையில்லை என்று ராதாகிருஷ்ணன் நல்லவர் என்று கூறியுள்ளார். மேலும் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் சட்டப்படி எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.