ஜெயலலிதாவை கொன்றது சசிகலா? அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் மாறுபட்ட பேச்சுக்கள்

ஜெயலலிதாவை கொன்றது சசிகலாதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார். சில மாதங்களுக்கு சசிகலா கொல்லவில்லை என்று பேசியுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா கடந்த 15ம் தேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர்தான் கொன்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்தியாவின் 3வது பெரிய கட்சியின் தலைவரான ஜெயலலிதாவை காப்பாற்ற பிரதமர் மோடி முயன்றார். இதற்காக மருத்துவமனைக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியைக் கூட பார்த்து பேசவிடமால், மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக அவர் கூறினார்.

இதை தமிழக மக்கள் நம்பினார்கள். அதனால்தான் நாங்கள் தலைமை கழகத்தில் இருந்த சசிகலாவின் படத்தை அகற்றினோம். ஒரு தாயை கொன்றவர்களை கட்சியில் இருந்தே இன்று விலக்கி வைத்துவிட்டோம்.

அவருடைய பேச்சு தொலைக்காட்சிகளில் வெளியானது.

இவருடைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே திண்டுக்கல் சீனிவாசன் 13.3.17 அன்று சேடப்பட்டியில் இதற்கு நேர் மாறாக பேசியுள்ளார்.

’’அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது, மூன்று தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. எங்களை எல்லாம் அழைத்து என்னால் கையெழுத்திட முடியவில்லை. கைநாட்டு போட்டிருக்கிறேன். இவர்கள் 3 பேரையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். ஜெயித்தது வந்ததும் அவர்கள் 3 பேரையும் அழைத்து ஆசீர்வாதம் செய்தார்.

75 நாள் மருத்துவமனையில் இருந்து நோய் முற்றி இறந்து போனார். உடனே அவரை கொன்றுவிட்டதாக திமுக பொய் பிரசாரம் செய்தது. எங்களுக்குத் தெரிந்து 32 வருடம் ஜெயலலிதாவோடு இருந்தவர் சின்னம்மாதான். அவர்கள் ஏன் கொல்ல வேண்டும். நாங்கள் எல்லோருமே மருத்துவமனையில் அம்மாவை பார்த்தேன். என் பிள்ளைகள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். சசிகலா குடும்பத்தினர் கொன்றதாக சொல்வது பொய்.

துரோகி பன்னீர் செல்வம், அம்மா சமாதியில் மகாத்மா காந்தி போல தியானம் செய்கிறார். சசிகலா வீட்டின் உப்பை தின்று, பல கோடிகளுக்கு அதிபதியான பச்சை துரோகி பன்னீர் செல்வம் அம்மா சாவில் மர்மம் இருக்குதுன்னா? என்ன அர்த்தம்.

மருத்துவமனையில் இருந்த போது அம்மா உங்க படத்தை போட்டுக் கொள்கிறோம் என்று கேட்டோம். அவர் நீங்கள் என்னை எப்படி பார்த்தீங்க. நான் இப்போ எப்படியிருக்கேன். இப்படி என்னோட படத்தை போட முடியுமா? இன்னும் நாலு நாளில் வீட்டுக்கு வந்துவிடுவேன். அதன் பின்னர் படத்தை வெளியிடுவேன் என்று சொன்னார்.’’ இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

இதற்கான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் எப்படித்தான் பேச முடியுமோ தெரியலை.

×Close
×Close