மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களில் சமர்பிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இதுக்குறித்து தீவிர விசாரணை நடத்த
முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆறுமுகசாமி ஆணையம்
ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் ஜெ.தீபாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/3-5.jpg)
இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 23ல் நீர்சத்து குறைவு என அறிக்கை வெளியிட காரணம் என்ன ? பல உறுப்புகளில் பாதிப்பு இருந்த போது ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார் என அப்போலோ தெரிவித்தது ஏன்?
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல தேவையில்லை என தெரிவித்தது ஏன் ? உள்ளிட்ட கேள்விகளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எழுப்பியுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். செப்டம்பர் 22ல் பேஸ்மேக்கர் பொருத்தப்படும் நிலையில் காய்ச்சல் என செய்தி ஏன் என்றும் அப்போலோ மருத்துவமனை தலைமை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதனிடம் ஆறுமுகசாமி ஆணையம் அடுகடுக்கான பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.