Advertisment

ஷகிலாவை தூண்டில் புழுவாக்கிய ஐ.டி.! போயஸ் கார்டனை தாக்கிய புயல் ஆபரேஷன் பின்னணி

போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் வி.கே.சசிகலாவின் அண்ணன் மகள் ஷகிலாவை தூண்டில் புழுவாக்கியிருக்கிறார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
j.jeyalalitha, aiadmk, poes garden, income tax department, IT raids, tamilnadu government, vk sasikala, ttv dhinakaran, vivek jeyaraman

போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் வி.கே.சசிகலாவின் அண்ணன் மகள் ஷகிலாவை தூண்டில் புழுவாக்கியிருக்கிறார்கள்.

Advertisment

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் ரெய்டு என்பதை அதிமுக-வின் எந்த அணித் தொண்டர்களும் எதிர்பார்க்கவில்லை. நேற்று (18-ம் தேதி) இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடந்த இந்த சோதனையை மிக பக்காவாக திட்டமிட்டு வருமான வரித்துறையினர் அரங்கேற்றியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டன் இல்லம் சென்சிட்டிவான இடம் என்பதால், முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருக்கிறார்கள். இந்தத் தகவல் டிடிவி.தினகரன் தரப்பில் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் மகளும், சிறையில் சசிகலாவுடன் இருப்பவரான இளவரசியின் இளைய மகளுமான ஷகிலாவை வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்தது.

j.jeyalalitha, aiadmk, poes garden, income tax department, IT raids, tamilnadu government, vk sasikala, ttv dhinakaran, vivek jeyaraman ஷகிலா, விவேக், கிருஷ்ணபிரியா

ஏற்கனவே கடந்த 13-ம் தேதி முதல் சசிகலா குடும்பத்தினரை தொடர்ந்து வருமான வரித்துறை இதேபோல அழைத்து விசாரிப்பதால், வழக்கமான விசாரணை என்றே ஷகிலா நினைத்தார். எனவே அவரும் கூலாக சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகம் சென்றார்.

வருமான வரித்துறையினர் அங்கு ஃபார்மாலிட்டியாக சில கேள்விகளை கேட்டு முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், ‘சரி, எங்ககூட வாங்க. உங்க வீட்டுக்கு போகலாம்!’ என அழைத்தனர். அப்போதே ஷகிலாவுக்கு ஏதோ பொறி தட்டினாலும், வேறு வழியின்றி வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சென்றார்.

ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் வாகனங்களை கொண்டு நிறுத்திய இடம், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை, சசிகலாவின் அறை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். (விவேக் ஜெயராமனை அழைத்து, இந்த சோதனையை நடத்தியதாக முதலில் வந்தத் தகவல்கள் கூறியது குறிப்பிடத்தக்கது)

போயஸ் கார்டனில் இரு பழைய லேப் டாப்களையும், இரு பென் டிரைவ்களையும், ஜெயலலிதாவுக்கு வந்த கத்தையான கடிதங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன்பிறகு ஜெயலலிதாவின் அறையை சோதனை போட வருமான வரித்துறையினர் அனுமதி கேட்டனர்.

இதற்கு ஷகிலா உடன்படவில்லை. ‘ஒரு பெண்மணியான என்னை மட்டும் அழைத்து வந்திருக்கிறீர்கள். அம்மா அறையை சோதனையிட நான் அனுமதிக்க முடியாது. டிடிவி.தினகரனை அழைப்போம்’ என்றார் ஷகிலா. அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள், ‘அவர் அரசியலில் இருக்கிறார். அவர் வந்தால், பிரச்னை ஆகிவிடும்’ என கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே இந்தத் தகவல் கேள்விப்பட்டு ஷகிலாவின் சகோதரரும் ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் அங்கு வந்தார். அவரும், ‘அம்மா அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்க முடியாது’ என உறுதியாக கூறிவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் வற்புறுத்தியபோது, ‘அம்மா அறையை சோதனையிட நீதிமன்ற அனுமதி பெற்றிருக்கிறீர்களா?’ என இவர்கள் கேட்டனர்.

அதற்கு அதிகாரிகள், ‘நீங்கள் அனுமதியுங்கள். 10 நிமிடங்களில் அனுமதி பெற்றுவிடுகிறோம்’ என கூறினார்கள். ஆனால் அதற்கும் விவேக் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவின் அறையை சோதனை போடாமல் திரும்பிச் சென்றனர்.

இளவரசியின் குடும்பத்தில் விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் சற்றே கடுமையானவர்கள்! சிக்கலான சூழலிலும் பதற்றம் அடையாதவர்கள்! அதனாலேயே இளையவரான ஷகிலாவை வருமான வரித்துறையினர் இந்த ஆபரேஷனுக்கு தூண்டில் புழுவாக்கியதாக கூறப்படுகிறது.

 

Income Tax Department Ttv Dhinakaran Vk Sasikala Poes Garden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment