/tamil-ie/media/media_files/uploads/2017/11/z738.jpg)
திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
இன்று அதிகாலை முதல் சுமார் 1800 வருமான வரித்துறைஅதிகாரிகள்,சசிகலாவின் மற்றும் அவருடைய உறவினர்கள், தெரிந்தவர்கள் என அனைவரது வீடு, அலுவலகங்கள், தண்ணீர் டேங்க் என ஒன்றுவிடாமல் அலசி ஆராய்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 20க்கும் அதிகமான இடங்கள், திருவாரூரில் 12 இடங்கள் என தொடர்ந்து சோதனை நீடிக்கிறது. வருமான வரி ஆணையர்கள் 6 பேர் தலைமையில் 1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'இப்போது தான் தூங்கி எழுந்தேன், ரெய்டு குறித்து ஒன்றும் தெரியாது' என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பற்றி பேட்டி அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆரம்பத்திலேயே 'பாரத பிரதமர்' என்று ஆரம்பித்தார். பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம், ஜெயா டிவியிலும், சசிகலா உறவினர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், "என்னது ரெய்டு நடக்கிறதா? அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே" என்று கூறி விட்டு எஸ்கேப் ஆனார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.