Advertisment

அமித்ஷா வந்து சென்ற மறுநாளே செந்தில் பாலாஜி கைது ஏன்? கே.எஸ் அழகிரி கேள்வி

’அமித்ஷா தமிழகம் வந்து சென்ற அடுத்த நாளே செந்தில் பாலாகி கைது செய்யப்பட்டுள்ளார், இந்நிலையில் இது பாஜகவின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் கம்மிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

author-image
Vasuki Jayasree
New Update
கே.எஸ் அழகிரி

கே.எஸ் அழகிரி

’அமித்ஷா தமிழகம் வந்து சென்ற  அடுத்த நாளே செந்தில் பாலாகி கைது செய்யப்பட்டுள்ளார், இந்நிலையில் இது பாஜகவின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் கம்மிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் கே.எஸ். அழகிரி அளித்த பேட்டியில் “  இது ஒரு மிகப் பெரிய ஜனநாயக்கப் படுகொலை.. அமலாக்கத்துறை எதை கண்டறிந்தது என்பதை சொல்லலாம். அமைச்சர் ஒன்றும் பயங்கரவாதி இல்லை. அவரது அறையில் வெடி குண்டு இல்லை. அவர் தேசத்ரோகம் செய்யவில்லை. அவர் தப்பி ஓட்டிவிடமாட்டார். பதுக்கல்காரர் அல்ல. அவர் கடத்தல்காரரும் இல்லை. அவர் ஒரு அரசியல் தலைவர். அவரை விசாரணை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அவரை நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.  அவர் ஏதோ பெரும் குற்றம் செய்வது போல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அரசு ஏதோ குற்றம் செய்த அரசு போல் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என மனநிலையில் இது நடைபெற்றுள்ளது. அமித்ஷா தமிழகத்திற்கு வந்து சென்ற மறுநாள் இவை நடக்கிறது . ஒரு ஜனநாயகத்தை பற்றி மத்திய அரசு என்ன நினைக்கிறது. மாநில அரசாங்கம் வழங்கிய பொருப்பில் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. எல்லா மாநிலத்திலும் பாஜக இதைதான் செய்கிறது. அரவிந்த் கேஜிரிவால் அமச்சரவையில்  சிசோடியாவை இதுபோல செய்தீர்கள்.

நாளை இவர்கள் எல்லாம் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் என்ன ஆகும். இப்படித்தான் 2 ஜி வழக்கு 2 ஆண்டுகள் நடைபெற்றது, இறுதியில் ராஜா குற்றமற்றவர் என்று  தீர்ப்பு வந்தது. ஆனால் அவர் 2 ஆண்டுகள் குற்றவாலியாக மக்கள் மத்தியில் கருதப்பட்டார். இந்த அவலநிலை ஏற்பட்டது. இவர்கள் செய்வது தவறு. காலையில் கைது செய்தால் என்ன? ஏன் காலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல கூடாதா?. பெண் விளையாட்டு வீரர்கள், பாஜக எம்.பி. மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடி வருகின்றனர். ஆனால் அவரை விசாரணைக்கு கூட இதுவரை காவல்துறை அழைக்கவில்லை. மேலும் அவரை காவல்நிலையத்திற்கு கூட அழைக்க  பாஜக மறுப்பு தெரிவிக்கிறது. ஒரு மாநில அமைச்சரை கைது செய்கிறது. இதுதான் மாநில அமைச்சர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பா?. மல்யுத்த வீரர்களின் பிரச்சனையில் அமிதா வாய் மூடி இருக்கிறார்.

மோடி வாய் மூடி இருக்கிறார். சட்ட ஒழுங்கு வாய் மூடி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஸ்டாலின்  பாஜவுக்கு எதிராக இருக்கிறார். பாஜக அரசை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். இந்தியாவிலேயே ஸ்டாலின் மதச் சார்ப்பின்மைக்கு எடுத்துகாட்டக விளங்கிகுறார். அதனால் அவரை துன்புறுத்த பார்க்குறீகள். இது சர்வாதிகத்தின் உச்சகட்டம் . செந்தில்பாலாஜி தவறு செய்ததாரா? இல்லை என்பது முக்கியமில்லை. ஆனால் அவர் நடத்தப்பட்ட விதம் மிகவும் தவறு. ஹிட்லர், ,முசோலினி செய்யாததைக்கூட மோடி செய்கிறா.ர் . இந்த சம்பவத்தை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது” என்று அவர் கூறீனார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment