Advertisment

முசிறி காவிரி அற்றில் காளி சிலை கண்டெடுப்பு; பொதுமக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு

காளி சிலை காவிரி ஆற்றில் கிடைத்த தகவல் அறிந்து அங்கு கூடிய ஏராளமான பொதுமக்கள் காளி சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும், பொட்டு வைத்தும், பூச்சூடியும் வணங்கி வழிபட்டனர்.

author-image
abhisudha
New Update
Kaali

Trichy kaali idol found in Cauvery river

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலித் தொழிலாளி செல்லமுத்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ பொருள் ஒன்று தட்டுப்பட்டுள்ளது.

Advertisment

அதனை எடுத்த பார்த்தபோது அது காளி சிலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து செல்லமுத்து அந்த சிலையை பத்திரமாக எடுத்து வந்து உமையாள்புரத்தை சேர்ந்த மணி என்பவரிடம் கொடுத்துள்ளார்.

அவர் சிலை கிடைத்த விபரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் யமுனாவிடம் கூறியுள்ளார். யமுனா முசிறி வட்டாட்சியருக்கு இந்த தகவலை தெரிவித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தார்.

காளி சிலை கிடைத்தது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் மற்றும் முசிறி கோட்டாட்சியர் ராஜன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   

Kaali idol

காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை 22 செ.மீட்டர் உயரமும், 1.620 கிலோ கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. 10 கரங்களுடன் கழுத்தில் கபால மாலை அணிந்தும், கரங்களில் சக்கரம், அருவாள், சூலம், கதாயுதம், கேடயம், வில், ரத்தம் ஏந்தும் சட்டி, சங்கு ஆகியவை ஏந்தியவாறு வலது காலில் ருத்திரனை மிதித்தவாறு, தலையில் மகுடம் சூடியும், விரித்த தலைமுடியுடன் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் கலை நயம் மிக்க படைப்பாக காளி சிலை காணப்படுகிறது.

இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொற்கொல்லர் ஒருவர் அழைத்து வரப்பட்டு சிலை சோதிக்கப்பட்டது. சோதனையில் அச்சிலை ஐம்பொன் சிலை என்பது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து காளி சிலை பத்திரமாக பெட்டியில் வைத்து சீல் இடப்பட்டு முசிறி சார்நிலை கருவூல காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இச்சிலையை காவிரி ஆற்றில் வீசியது யார்? எங்கேனும் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலையை கொள்ளையர்கள் வீசி எறிந்தனரா? என பல்வேறு கோணங்களில் முசிறி டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக காளி சிலை காவிரி ஆற்றில் கிடைத்த தகவல் அறிந்து அங்கு கூடிய ஏராளமான பொதுமக்கள் காளி சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும், பொட்டு வைத்தும், பூச்சூடியும் வணங்கி வழிபட்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment