Advertisment

பெண்களுக்கு ரூ.1,000 உதவித் திட்டம்: சென்னைவாசிகள் இந்த உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்

முகாம்களை சுமூகமாக நடத்த தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என மொத்தம் 3,473 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Kalaignar magalir urimai thogai scheme

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை) செயல்படுத்துவதற்கான முகாம்களை சென்னை மாநகராட்சி இரண்டு கட்டங்களாக நடத்தும் என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.

Advertisment

முதற்கட்டமாக 98 வார்டுகளில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 102 வார்டுகளிலும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கிறது.

தமிழக அரசு இத்திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளது.

ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரேஷன் கடை தொழிலாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் குறித்த விவரங்களுடன் விண்ணப்பப் படிவங்களை டோக்கன்களுடன் வழங்குவார்கள்.

பயோமெட்ரிக் தகவல்களை எடுப்பதில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் முகாம்களுக்கு விரைந்து செல்ல வேண்டாம். முகாம்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட நடைபெறும்.

குடியிருப்புவாசிகள் ஆதார், ரேஷன் கார்டு, மின் கட்டணம் ரசீது, வங்கி பாஸ்புக் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இந்த முகாம்களுக்கு அருகிலுள்ள உதவி மையங்களில் 703 பணியாளர்கள் இருப்பார்கள். மேலும், ஊழியர்களுக்கு உதவ 2,607 தன்னார்வலர்கள் இருப்பார்கள்.

முகாம்களை சுமூகமாக நடத்த தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என மொத்தம் 3,473 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள், என்றார்.

ராதாகிருஷ்ணன் கூறுகையில், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் சுமூகமான செயல்பாட்டை உறுதிசெய்ய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 மேலும் தகவல்களுக்கு கட்டுப்பாட்டு அறையின் ஹெல்ப்லைன் எண்ணை 044-25619208க்கு டயல் செய்யவும் அல்லது 9445477205 என்ற வாட்ஸ்அப்பில் உதவி பெறவும் அல்லது 1913 என்ற கால் சென்டரைத் தொடர்பு கொள்ளவும்.

அந்தந்த மண்டல அலுவலகங்களையும் அணுகலாம், என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment