'சாதி பெயரை சொல்லி மிரட்டினர்; இப்போது கொன்று விட்டனர்': காளையார் கோவிலில் படுகொலை செய்யப்பட்ட சரத் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

"தவசுகுடி பிரபு மனைவி, அவரது அம்மா, அண்ணன் ஆகிய 4 பேரும் எனது கணவரை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். இப்போது அவரை கொன்று விட்டனர்." என்று காளையார் கோவிலில் படுகொலை செய்யப்பட்ட சரத் மனைவி மாலதி கூறினார்.

"தவசுகுடி பிரபு மனைவி, அவரது அம்மா, அண்ணன் ஆகிய 4 பேரும் எனது கணவரை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். இப்போது அவரை கொன்று விட்டனர்." என்று காளையார் கோவிலில் படுகொலை செய்யப்பட்ட சரத் மனைவி மாலதி கூறினார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaiyar Kovil murder Neduvathavu sarathkumar Thavasukudi prabhu Tamil News

"தவசுகுடி பிரபு மனைவி, அவரது அம்மா, அண்ணன் ஆகிய 4 பேரும் எனது கணவரை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். இப்போது அவரை கொன்று விட்டனர்." என்று காளையார் கோவிலில் படுகொலை செய்யப்பட்ட சரத் மனைவி மாலதி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவியது. இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதிகேட்டு அவரது குடும்பத்தினர், உறவினர் என ஏராளமானோர் குடியிருந்தார்கள். அவர்கள் மதுரை - தொண்டி ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப் பகுதியில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Advertisment

கள நிலவரத்தை அறிய அங்கு நேரில் சென்றோம். அப்போது, போராட்டம் தொடர்பாக நாம் விசாரிக்கையில், காளையார்கோவில் அருகேயுள்ள நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29). இவருக்கும் தவசுகுடி ஊரைச் சேர்ந்த பிரபு-வுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தனது நண்பர் மரக்காத்தூர் சிவசங்கர் (28) உள்ளிட்ட சிலருடன் இருப்பான் பூச்சி மதுக்கடை பாரில் இருந்துள்ளனர். 

அப்போது, அங்கு இரண்டு பேருடன் வந்த  தவசுகுடி பிரபு, பாரில் இருந்த சரத்தை அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளனர். அப்போது, இடைமறிக்க வந்த சிவசங்கரின் இடது கையில் வெட்டு விழுந்துள்ளது. சரத்குமாரின் கழுத்து பகுதியில் பலமான வெட்டு நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவசங்கர் பலத்த காயங்களுடன்,  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Advertisment
Advertisements

சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து, மதுரை - தொண்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதையடுத்து, இது தொடர்பாக தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி)ஆஷிஷ்  ராவத் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அவர் உறவினர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதனிடையே, தனது கணவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரது மனைவி மாலதி கூறுகையில்,  "தவசுகுடி பிரபுவுக்கும் எனது கணவருக்கும் இடையே முன்பகை இருந்தது. இந்த சூழலில், பட்டியல் இன சாதி பெண் ஒருவருக்கு ஆதரவாக எனது கணவர் பேசினார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, தவசுகுடி பிரபு மனைவி, அவரது அம்மா, அண்ணன் ஆகிய 4 பேரும் எனது கணவரை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என கொலை மிரட்டல்  விடுத்தனர். எங்களது சாதி பெயரை சொல்லியும் மிரட்டியுள்ளனர். இப்போது அவரை கொன்று விட்டனர். 

அந்த தவசுகுடி பிரபு மீது 13-க்கும் மேற்பட்ட வழக்கு இருக்கிறது. அதில் 14-வது வழக்காக எனது கணவரின் மரண வழக்கு இருந்து விடக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்ய வேண்டும். வெளியில் வர முடியாத அளவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்." என்று கோரிக்கை வைத்தார். 

இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவரும், சரத்குமாரின் அக்கா கணவருமான பாக்கியராஜ் இது குறித்து பேசுகையில், "கடந்த 2 நாட்களாக  தவசுகுடி பிரபு, அவரது குடும்பத்தினர் சாதி பெயரை சொல்லி சரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார்கள். அதுபற்றி பேசிக் கொள்வோம் என அவரிடம்  சொல்லி வைத்தேன். 

இந்த சூழலில், நேற்று இருப்பான் பூச்சி மதுக்கடையில் அவரை படுகொலை செய்தனர்.சம்பவ இடத்திற்கு நான் சென்ற போது, பிரபு தான் முதலில் சரத் நெஞ்சில் அரிவாளால் வெட்டினார். பின்னர் அங்கிருந்த மற்றவர்கள் அவரை வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உயிர் பரிதமாக போனது. இப்போது அவரது மனைவி அனாதையாக நிற்கிறார். 

படுகொலை செய்த பிரபு மீது கொலை வழக்கு போட வேண்டும். சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசிய  பிரபு குடும்பத்தினர் மீதும் வழக்கு போட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். 

இந்த வழக்கில் ஒருவர் ஆஜரான நிலையில், இன்னும் இருவர் கைது  செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிவகங்கை எஸ்.பி நடத்திய பேச்சு வார்த்தையில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்தோர் கலைந்து சென்றனர். 

செய்தி, புகைப்படம்: மார்ட்டின் ஜெயராஜ்.  

Sivagangai Murder

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: