Advertisment

தாய் - தந்தை மரணம் : பரிதாப நிலையில் குழந்தைகள் ; கள்ளச்சாராயத்தால் கண்ணீர் நகரமான கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மழைக்கு இடையே ஒரே இடத்தில் 22 உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kallakurichi Death psd.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 39 பேர் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனை, சேலம், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Kallakurichi Death psd.jpg
சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சம்பவத்தின் பின்னணி என்ன?

கருணாபுரம் என்பது கள்ளக்குறிச்சியின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். பேருந்து நிலையம், நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம் என அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பின்புறம் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் இந்த கோர சம்பவத்தின் பின்னணி அமைந்துள்ளது. பெரும்பாலும் சிறுசிறு வீடுகள் அமைந்துள்ள இந்த பகுதியில் நேற்று முன்தினம் ஒரு துக்க நிகழ்வில், சாராய சப்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அது விஷச்சாராயம் என்று தெரியாமல் குடித்ததன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மட்டும் 28 பேர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி நகராட்சியின் 9-வது வார்டில் மட்டும் 10 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kallakurichi Death psd.jpg
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தாய் – தந்தை மரணம் : பரிதவிக்கும் குழந்தைகள்

கருணாபுரம் பகுதியில், பெயிண்டராக வேலை பார்த்து வந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் என 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி வடிவுக்கரசி 3-வது குழந்தை பிறந்தவுடன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனிடையே கள்ளச்சாராயம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த சுரேஷ் மது அருந்திவிட்டு மீதியை க்ளாசில் ஊற்றி வைத்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வடிவுக்காரசி ஓமத்தண்ணீர் என்று நினைத்து விஷச்சாராயத்தை குடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது இருவருமே மரமணடைந்தனர். அவர்களின் 3 குழந்தைகளும் தற்போது யாரும் இல்லாமல் பரிதாபமான நிலையில் இருக்கின்றனர்.

Kallakurichi Death psd.jpg
பெற்றோரை இழந்த பிள்ளைகள்

சம்பவத்திற்கு காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து கருணாபுரம் 5-வது வார்டு கவுன்சிலர் யுவராணி ராஜா அவர்களிடம் கேட்டபோது, இது அரசாங்கம் மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயம். இது பற்றி காவல்துறைக்கு கண்டிப்பாக தெரியும். அவர்களில் அலச்சியப்போக்கினால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உளவுத்துறைக்கு நன்று தெரியும். அவர்களிடம் கேட்டாலே இதற்கு யார் காரணம் என்று சொல்லிவிடுவார்கள். கடந்த 2 வருடங்களாகத்தான் இந்த கள்ளச்சாராயம் பிரச்சனை இருக்கிறது. இது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு தெரியாமல் இங்கு எதுவும் நடக்காது. இந்த சம்பத்திற்கு முழுக்க முழுக்க அவர்கள் தான் பொறுப்பேற்றக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த கருணாபுரம் பகுதியில் நல்லது கெட்டது எது நடந்தாலும் சாராயம் சப்ளை ஆகும் என்பது உண்மையா என்று கேட்டபோது, அதெல்லாம் உண்மை இல்லை, தமிழ்நாடு முழுவதும் சாராயம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மலையில் இருந்து வரும் குடிப்பார்கள். ஆனால் இப்போது எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. இருக்கும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் தான் தவறாக எதையும் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

Kallakurichi Death psd.jpg
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சமி

கள்ளக்குறிச்சி மருத்துவனைக்கு வந்த அரசியல் தலைவர்கள்

கள்ளச்சாராயம் குறித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் வகையில், முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரது வருகையின் காரணமாக பொதுமக்கள் மருத்துவனை உள்ளே அனுமதிக்காததால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு வந்தடைந்தார். அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், வெளியில் வந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ளது இந்த அரசின் அலச்சியத்தை காட்டுக்கிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

Kallakurichi Death psd.jpg
ஒரே தெருவில் உயிரிழந்த 10 பேர்

மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் அவர்கள் குடும்பத்தின் முக்கிய நிதி ஆதாரமாக இருந்துள்ளனர். அதனால் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும், பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க ஏற்கும் என்றும், அவர்களுக்கு 10 வருடங்களுக்கு அ.தி.மு.க சார்பில், மாதம் தலா ரூ5000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து விசிக கட்சியின் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், சி.பி.எம்.கட்சியின், கே.பாலகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நிவாரணம் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாபுரம் பகுதியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Kallakurichi Death psd.jpg
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்

ஓரே இடத்தில் 22 உடல்கள் தகனம்

கருணாபுரம் பகுதியில் 28 பேர் மரணமடைந்துள்ள நிலையில், கோமுகி நதிக்கரையில் 22 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் உடல்கள் மயானத்திற்கு கொண்டுவர தொடங்கிய நிலையில், பலத்த காற்றுடன் மழை பெற்ற தொடங்கியது. இதன் காரணமாக உடல் தகனத்தில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றவுடன் உடல் தகனம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இரவிலும் உடல் தகனம் நடைபெறும் என்பதால். மயானத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

Kallakurichi Death psd.jpg
ஒரே இடத்தில் 22 உடல்கள் தகனம் செய்ய ஏற்பாடு
Light Settign
மயானத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி

கண்ணீர் நகரமான கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி நகரம் தற்போது கண்ணீரில் மூழ்கியுள்ளது. தங்களது உறவினர்களை கள்ளச்சாராயத்திற்கு பறிகொடுத்த மக்கள் கதறி அழும் காட்சிகள் பலரையும் கலங்க வைக்கிறது. மேலும் கள்ளச்சாராயம் இல்லாமல் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குறித்து 10-க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamilnadu news Kallakurichi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment