Advertisment

அப்துல் கலாம் இல்லத்தில் கமல்ஹாசன் - புகைப்படங்கள்

அப்துல் கலாம் இல்லத்தில் இன்று தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், மாடியில் இருந்த மியூஸியத்தையும் பார்வையிட்டார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan at abdul kalam house

தன்னுடைய அரசியல் பயணத்தை இன்று காலை ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசனை, கலாமின் பேரன் சலீம் அழைத்துச் சென்றார். இல்லத்தில் இருந்த அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயரிடம் ஆசிபெற்ற கமல்ஹாசன், அவருக்கு கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.

அப்துல் கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கமல்ஹாசனுக்கு அளித்தார் கலாமின் பேரன் சலீம். அப்துல் கலாம் இல்லத்தில் காலை உணவு சாப்பிட்ட கமல்ஹாசன், மாடியில் இருந்த மியூஸியத்தையும் பார்வையிட்டார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment